பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - மேஷம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - மேஷம்

விருப்பங்களை உடனே நிறைவேற்ற நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசியில் குரு அமர்ந்து பார்க்கும் இடங்களில் நல்ல பலன்களை தருவதுடன், லாபஸ்தானத்தில் சனி நின்று ராசியை பார்ப்பதால், கால சுழற்சியில் ஏற்படும் பல சோதனைகள் உங்களை பாதிக்காமல் உதவும் வகையில் தொழிலிலும், உத்தியோகத்திலும் நற்பலன் அடைவீர்கள். சரியான நிலைபாடுகளை உணர்ந்து செயல்படுவீர்கள். எதையும் சில நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளை யோசித்து செயல்படுவது நன்மையை தரும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை சீராகும்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
03-02-2024 சனி இரவு 09.30 முதல் 06-02-2024 செவ்வாய் அதிகாலை 04.15 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
குறைந்த முதலீடு மூலம் அதிக லாபம் பெறுவீர்கள். உங்களின் நிலையிலிருந்து சிறிது கூட மாறாமல் செயலில் இறங்கி நன்மை பெறுவீர்கள்.
 
பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதையும் எளிதாக பேசித் தீர்வு காண்பீர்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
 
அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செயல்பாடுகள் மூலம் நற்பெயர் பெறுவீர்கள். பணியில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஓரஞ்சு, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, தென் கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, வெள்ளை நிற பூ வைத்து, நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.